1143 | இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை- கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (7) |
|