1144 | பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்-தன்னை- போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல் சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (8) |
|