1146 | வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னைச் சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர்-தாமே (10) |
|