1158 | காயோடு நீடு கனி உண்டு வீசு கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா -திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (2) |
|