1162 | நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி நும்-தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர் அவ் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக செவ் வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (6) |
|