1163 | மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (7) |
|