1165 | செரு நீல வேல் கண் மடவார்திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (9) |
|