1166 | சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் கார் ஆர் புயல் கைக் கலிகன்றி குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர்-தாமே (10) |
|