1167வாட மருது இடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆ-நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்-
சேடு உயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே             (1)