1170வளைக் கை நெடுங்கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாடத்
திளைத்து அமர் செய்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே             (4)