1173ஆவர் இவை செய்து அறிவார்? அஞ்சன மா மலை போல
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகு ஆய
காவி மலர் நெடுங் கண்ணார் கை தொழ வீதி வருவான்-
தேவர் வணங்கு தண் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே            (7)