1175கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழ் உலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமகளோடும் வருவான்-சித்திரகூடத்து உள்ளானே             (9)