1177ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி
      உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த
      தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்
      அங்கங்கள்-அவை ஆறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே             (1)