1178நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை
      நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை
      ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச்
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்
      தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே             (2)