1179 | வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் செய் அணைந்து களை களையாது ஏறும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (3) |
|