1180 | பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலாக் காட்ட பவளம்-தன்னால் செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (4) |
|