1182 | பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்-கோன் தாள் அணைவீர் வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முகக் கமலச் சோதி-தன்னால் திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (6) |
|