1183 | பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (7) |
|