1184பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்
      பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல்
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்
      மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ
      நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே             (8)