1185 | பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத் தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (9) |
|