1186செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச்
      சீராமவிண்ணகர் என் செங் கண் மாலை
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன்
      அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்
      கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ்-மாலை பத்தும் வல்லார்
      தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே             (10)