1187வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
      புகுந்ததன்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந்
      தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந் தழல் புரையும் திருவாலி அம்மானே             (1)