1189நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி
      இராமை என் மனத்தே புகுந்தது
இம்மைக்கு என்று இருந்தேன்-எறி நீர் வளஞ் செறுவில்
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார்
      முகத்து எழு வாளை போய் கரும்பு
அந் நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே             (3)