1191நீடு பல் மலர் மாலை இட்டு நின்
      இணை-அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல்-மரம் எய்த மா முனிவா
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை
      பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே             (5)