1192கந்த மா மலர் எட்டும் இட்டு நின்
      காமர் சேவடி கைதொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்-
சந்தி வேள்வி சடங்கு நான்மறை
      ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே             (6)