1193உலவு திரைக் கடல் பள்ளிகொண்டு வந்து
      உன் அடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகலொட்டேன்-
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண்
      தாமரை மலரின்மிசை மலி
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே             (7)