1217நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
      நர நாரணனே கரு மா முகில்போல்
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
      இமையோர் பரவும் இடம்-எத் திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே
      களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (1)