1218 | முதலைத் தனி மா முரண் தீர அன்று முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம்-விண் அணவும் பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப் பவளக் கொழுங் கால பைங் கால் புறவம் மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (2) |
|