1219கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று
      கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு
      அணைந்திட்ட அம்மான் இடம்-ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்
      அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (3)