1220சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று
      திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய
      கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்-
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்
      ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (4)