1221 | இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்-தான்- குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (5) |
|