1222 | பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகு வாய்க் கழுதுக்கு இரங்காது அவள்-தன் உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம்-ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (6) |
|