1223தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்
      தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி-தன்மேல்
      அடி வைத்த அம்மான் இடம்-மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்
      செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (7)