1224 | துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்-தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம்-வேல் நெடுங் கண் முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (8) |
|