1225விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த
      விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று
      இமையோர் பரவும் இடம்-பைந் தடத்துப்
பெடையோடு செங் கால அன்னம் துகைப்ப
      தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             (9)