1227 | சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1)1 |
|