1228 | திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே (2) |
|