1229அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
      அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்டம்-அது நிறைத்து அவன்கண் சாபம்-அது நீக்கும்
      முதல்வன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி
      இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே             (3)