1230கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக்
      காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி
தலையில் அங் கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
      தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம்
      செழுங் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகைமேல் மலிவு எய்தும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே             (4)