| 1232 | பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லாப் பெரிய வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (6) |
|