1234 | ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழித் தடக் கையன் அலர்-மகட்கும் அரற்கும் கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8) |
|