| 1235 | வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9) |
|