1236 | சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான்-தான் அமரும் கோயில் வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர்-தம் தலைவன் மருவலர்-தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன சங்கம் மலி தமிழ்-மாலை பத்து-இவை வல்லார்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே (10) |
|