1237 | திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம்-பெரும் புகழ் வேதியர் வாழ்- தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1) |
|