| 1238 | வென்றி மிகு நரகன் உரம்-அது அழிய விசிறும் விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்- என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (2) |
|