1239உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்
      உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்தக்
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன்
      குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்-மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட
      பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே             (3)