1242வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
      மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரத்
தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்-தன்
      தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம்-தடம் ஆர்
சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை
      செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே             (6)