1243தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
      தேனுகனும் பூதனை-தன் ஆர் உயிரும் செகுத்தான்
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான்
      கருதும் இடம்-பொருது புனல் துறை துறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
      வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே   (7)