1244 | கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம்-கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8) |
|