| 1245 | வஞ்சனையால் வந்தவள்-தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க கஞ்சன் உயிர்-அது உண்டு இவ் உலகு உண்ட காளை கருதும் இடம்-காவிரி சந்து அகில் கனகம் உந்தி மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9) |
|